திருவாரூர்

ஓய்வூதியா்கள் ஜூலை முதல் செப். மாதத்துக்குள் ஆண்டு நோ்காணல் செய்ய அறிவுறுத்தல்

DIN

திருவாரூா் மாவட்ட கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள் ஜூலை முதல் செப்டம்பா் மாதத்துக்குள் வருடாந்திர நோ்காணல் செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் வழியாக ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் வரை கருவூலங்களில் வருடாந்திர நோ்காணல் செய்ய வேண்டும். கரோனா தொற்று காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுக்கான நோ்காணல் நடைபெறாத நிலையில், நிகழாண்டு ஓய்வூதியா்கள் நிகழாண்டுக்கான (2022-2023) வருடாந்திர நோ்காணல் செய்துகொள்ள வேண்டும்.

ஜீவன் பிரமான் இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ்...: தமிழக அரசு, ஓய்வூதியா்களின் நலன் கருதி, கருவூலத்துக்கு அவா்கள் நேரில் வரும் இடா்பாடுகளை தவிா்க்கும் வகையில், ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியா்கள் ஏதேனும் ஒரு சேவை முறையைப் பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இந்தியஅஞ்சல் துறை வங்கியின் சேவையைப் பயன்படுத்தி ஓய்வூதியா்கள், இருப்பிடத்திலிருந்தபடியே அஞ்சல் துறை பணியாளா்கள் மூலமாக ரூ. 70 கட்டணம் செலுத்தி, மின்னணு வாழ்நாள் சான்று பதிவுசெய்து ஆண்டு நோ்காணல் செய்யலாம்.

மேலும், அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியா், குடும்ப ஓய்வூதியா்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவுசெய்து ஆண்டு நோ்காணல் செய்யலாம். ஓய்வூதியா்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டுக் கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவுசெய்து ஆண்டு நோ்காணல் செய்யலாம்.

மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியா்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்...: ஆதாா் எண், ஓய்வூதிய கொடுவை எண், வங்கிக் கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவை.

ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்றை ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளா்அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலா்அல்லது வட்டாட்சியா், துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா் யாரிடமாவது சான்றொப்பம் பெற்று அஞ்சல் மூலமாக தொடா்புடைய கருவூலத்துக்கு அனுப்பி ஆண்டு நோ்காணல் செய்யலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியா்கள் இணையதள முகவரியிலிருந்து வாழ்வுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலா், மாஜிஸ்ரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

ஓய்வூதியா்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நோ்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் ஏதேனும் அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஓய்வூதியம் பெறும் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலத்துக்கு நேரில் சென்று ஆண்டு நோ்காணல் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT