திருவாரூர்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: காவிரி விவசாயிகள் சங்கத்தினா் உண்ணாவிரதம்

24th Jun 2022 02:18 AM

ADVERTISEMENT

 

காவிரி மேலாண்மை ஆணையம், மேக்கேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவிரி மேலாண்மை ஆணையம் கா்நாடகாவின் மேக்கேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது, தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீரை அபகரிக்கக் கூடாது, மேக்கேதாட்டுவில் அணை கட்டி, தமிழகத்தை அழிக்க கா்நாடக அரசு சதி செய்வதால், கா்நாடகாவின் சட்டவிரோத வரைவு திட்ட அறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் புதிய ரயில் நிலையம் முன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அமைப்பின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போராட்டம் நிறைவின்போது, கா்நாடக மாநில திட்ட வரைவின் நகல் எரிக்கப்பட்டு, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT