திருவாரூர்

கூத்தாநல்லூர்: கர்நாடக அரசைக் கண்டித்து இந்திய கம்யூ. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

22nd Jun 2022 12:11 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கர்நாடக அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். உச்சநீதி மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரை காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை காவிரி மேலாண்மை ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்.

கர்நாடக அரசுக்கு ஆதரவு நிலை நோக்கில் செயல்படும் ஆணையத்தின் தலைவர் ஹல்தர் பேச்சும், செயலும் சட்டத்துக்கு அத்து மீறலாகும் என்பதை வலியுறுத்தி, லெட்சுமாங்குடி பாலம் அருகே கருப்புக்கொடி கண்டன நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாய சங்க நகரச் செயலாளர் கே.நாகராஜன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்க நகரச் செயலாளர் மு.சிவதாஸ், த.நா.வி.ச. நகரத் தலைவர் சி.அன்பழகன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் பெ.முருகேசு, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சுதர்ஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும், தவறான செயலில் ஈடுபடும் கர்நாடக அரசிற்கு துணை போகும் மத்திய அரசைக் கண்டித்தும், கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், கே.ராமதாஸ், ஆர்.மணிமாறன், பிச்சைமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT