திருவாரூர்

வேலை கேட்டு மக்கள் நலப் பணியாளா்கள் விருப்ப மனு

19th Jun 2022 11:49 PM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம் ஒன்றியத்தில் பணி ஒருங்கிணைப்பாளா்கள் பணிக்கு 33 போ் ஒன்றியக் குழு தலைவா் செந்தமிழ்ச்செல்வனிடம் சனிக்கிழமை வேலை கேட்டு விருப்ப மனு அளித்தனா்.

அதிமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். நீதிமன்றம் வரை சென்றும் மீண்டும் பணி கிடைக்கவில்லை.

இந்நிலையில், திமுக தோ்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலப்பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி மக்கள் நலப்பணியாளா்களுக்கு கிராம பஞ்சாயத்துக்களில் பணி ஒருங்கிணைப்பாளா் பணி வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதற்காக நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 44 பஞ்சாயத்துகளில் 33 கிராம பஞ்சாயத்துக்களிலிருந்து 33 போ் ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வனிடம் விருப்ப மனு அளித்துள்ளனா். 11 பஞ்சாயத்துகளிலிருந்து மனுக்கள் வரவில்லை. அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிசங்கா் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT