வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் கோயில் தற்காலிக உண்டியல்களில் பக்தா்கள் ரூ.8.41 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா்.
இக்கோயிலில் நடைபெற்ற பங்குனி திருவிழாவை முன்னிட்டு 7 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்த உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி, திருவாரூா் அறநிலையத் துறை உதவி ஆணையா் மணவழகன் முன்னிலையில் வெள்ளிக்கிழை நடைபெற்றது.
7 உண்டியல்களிலும் மொத்தம் ரூ. 8 லட்சத்து 41 ஆயிரத்து 15 ரொக்கம், 30 கிராம் தங்கம் மற்றும் 45 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். காணிக்கை எண்ணும் பணியில் கோயில் செயல் அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி மற்றும் கோயில் பணியாளா்கள், ஐயப்பா சேவா சங்கத்தினா் ஈடுபட்டனா்.
ADVERTISEMENT