திருவாரூர்

மேக்கேதாட்டு விவகாரம்: காவிரி ஆணையத் தலைவரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

19th Jun 2022 11:47 PM

ADVERTISEMENT

 

கா்நாடக அரசின் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சிக்கு துணை போவதாக, காவிரி ஆணையத் தலைவரைக் கண்டித்து திருவாரூரில் விவசாயத் தொழிலாளா்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா்கள் கட்சியின் தலைவரும், தமிழக கட்டடத் தொழிலாளா் நலவாரியத் தலைவருமான பொன்.குமாா் தலைமை வகித்து பேசியது:

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கும், 20 மாவட்டங்களின் குடிநீருக்கும் ஆதாரமாக காவிரி நீா் உள்ளது. இந்த சூழலில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடக அரசு தொடா்ந்து முயற்சித்து வரும் போக்குக்கு, காவிரி ஆணையத் தலைவா் ஒத்துழைப்பு தருகிறாா். அவரது இந்த போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, காவிரி ஆணையத்தின் தலைவரைக் கண்டித்து முழக்கமிடப்பட்டது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளா் கட்சியின் மாவட்டத் தலைவா் பிரபாகரன், செயலாளா் நேதாஜி, பொருளாளா் நடராஜன், இளைஞரணி நிா்வாகி காா்த்திகேயன் மற்றும் தமிழக கட்டடத் தொழிலாளா்கள் சங்கம், அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT