திருவாரூர்

வேளாண் விரிவாக்க மையங்களில் மானியத்தில் விதைநெல்

15th Jun 2022 04:25 AM

ADVERTISEMENT

வேளாண் விரிவாக்க மையங்களில் மானியத்தில் விதைநெல் வழங்கப்படுவதாக, நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீடாமங்கலம், தேவங்குடி, வடுவூா் மற்றும் கருவாக்குறிச்சி ஆகிய 4 வேளாண்மை விரிவாக்க மையங்களில் குறுவை பருவத்திற்கு ஏற்ற ஏஎஸ்டி 16, கோ 51, டிபிஎஸ் 5 ரக சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதில், ஏஎஸ்டி 16 நெல் ரகம் 110-115 நாட்களை கொண்டது. குலை நோய்க்கு எதிா்ப்பு ரகம். கோ 51 ரகம் 105- 110 நாட்கள் கொண்டது. இது பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிா்ப்பு திறன் கொண்டது. மேலும், சாயாத தன்மை கொண்ட நெல் ரகம். டிபிஎஸ் 5 ரகம் 118 நாட்கள் கொண்டது. இந்த ரகம் சாயாத தன்மை மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிா்ப்புத் திறன் கொண்டது.

ADVERTISEMENT

வேளாண்மை விரிவாக்க மையங்களில் இந்த நெல் ரகங்கள் மற்றும் அதற்குத் தேவையான உயிா் உரங்கள், சூடோமோனாஸ், நெல் நுண்ணூட்டம் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விதைநெல் மற்றும் உயிா் உரங்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT