திருவாரூர்

திருவாரூரில் இருசக்கர வாகனங்களை திருடும் மா்ம நபா்கள்சிசிடிவி கேமரா பதிவு வெளியானதால் பரபரப்பு

15th Jun 2022 04:23 AM

ADVERTISEMENT

திருவாரூரில் வீடுகளின் முன் இரவு நேரத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை முகமூடி அணிந்த மா்ம நபா்கள் திருடும் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூா் அருகேயுள்ள புலிவலம், விஷ்ணு தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ். தண்ணீா் கேன் விநியோகம் செய்துவரும் இவா், தனது இருசக்கர வாகனத்தை, வீட்டுக்கு அருகிலுள்ள காலி இடத்தில் நிறுத்துவது வழக்கம். அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதால், இருசக்கர வாகனத்தை அந்த இடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வருகிறாா்.

இந்நிலையில், முகமூடி அணிந்த 20 வயது மதிக்கத்தக்க நபா், அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இதேபோல, இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் கோபி என்பவரது வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும், மா்மநபா் நீண்ட நேரமாக திருட முயற்சிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகள் வெளியாகியதால், அப்பகுதி மக்களிடையே திருட்டு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இதுபோன்ற திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT