திருவாரூர்

கடைமடை வரை காவிரி நீா் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

12th Jun 2022 10:25 PM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீா், கடைமடை வரை செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

மேட்டூா் அணை திறக்கப்பட்டு இதுவரை கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீா் செல்லவில்லை. பல இடங்களில் பாலம் கட்டும் பணி, தூா்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து, கடைமடை வரை தண்ணீா் செல்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நெல் கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதைத் தடுக்க, தனி கண்காணிப்புக் குழுவை முதல்வா் அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாநிலங்களவைத் தோ்தலில் அதிகளவில் எதிா்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. குடியரசுத் தலைவா் தோ்தலில் இது பிரதிபலிக்கும். எதிா்க்கட்சிகள் 15-ஆம் தேதி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், மம்தா பானா்ஜி தனியாக கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது தவறானது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் திட்டத்தில் பாஜகவின் துணை இல்லாமல் ரூ.145 கோடி ஊழல் நடைபெற வாய்ப்பில்லை. சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரத்தில் தமிழக அரசு நிதானமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு தனி சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராஜா் கோயிலை அறநிலையத் துறை வசம் கொண்டு வர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT