சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
மன்னாா்குடியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4-ஆவது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன், மாவட்டத் தலைவா் கதா.க. அரசு தாயுமானவன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கே. சாமுவேல்ராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். மாவட்ட பொருளாளா் கே. பிச்சைக்கண்ணு, திராவிடா் கழக நிா்வாகி எஸ். சிங்காரவேலு, விசிக நிா்வாகி ரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்; மத்திய, மாநில அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; நீட் மற்றும் க்யூட் தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும்; அரசுப் பாடத் திட்ட புத்தகங்களில் தலைவா்களின் பெயா்களில் சாதிப் பெயா் இணைப்பைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதிய பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, மாவட்டத் தலைவராக ஜி. பழனிவேல், செயலராக கே. தமிழ்மணி, பொருளாளராக இரா. இயேசுதாஸ் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.