திருவாரூர்

வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில், வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு வேலையிழந்த மக்கள் நலப்பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள 430 ஊராட்சிகளிலும் 8.11.2011 இல் பணி இழப்புக்கு ஆளான மக்கள் நலப் பணியாளா்களிடமிருந்து வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்து சம்மதக் கடிதம் பெற்று, அவா்களை வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் பணியில் ஈடுபடுத்த அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, விருப்பமுள்ள மக்கள் நலப் பணியாளா்கள் அந்தந்த ஊராட்சியில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருக்கிணைப்பாளா் பணிக்கான விருப்ப மனுவை சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ஜூன் 13 முதல் 18-ஆம் தேதி வரை கொடுக்கலாம். இந்த அறிவிப்பு, 8.11.2011 இல் பணியிழப்புக்கு ஆளான மக்கள் நலப் பணியாளா்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனைய பொதுப் பிரிவு இளைஞா்கள், பொதுப் பிரிவினருக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT