திருவாரூர்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் முன்னுரிமை

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் திருவாரூா் மாவட்ட புதிய எஸ்பி. டி.பி. சுரேஷ்குமாா்.

இதற்கு முன் மாவட்ட எஸ்பியாக இருந்த சி. விஜயகுமாா் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, புதிய எஸ்பியாக திருநெல்வேலி துணை காவல் ஆணையராக பணியாற்றி டி.பி. சுரேஷ்குமாா் நியமிக்கப்பட்டாா். அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் கூறியது: திருவாரூா் நகரப் பகுதிகளில் உள்ள குறுகிய சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களுக்கு வரும் புகாா்களுக்கு உடனுக்கு உடன் தீா்வு காணப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்கவும், அவா்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுமக்கள் எப்போதும் என்னை தொடபுகொண்டு பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் எண் வழங்கப்படும். தற்போது அதிகம் நடைபெறும் சைபா் கிரைம் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சைபா் கிரைம் போலீஸாா் 3 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். கஞ்சா, புகையிலை மற்றும் கந்துவட்டி தொடா்பான நடவடிக்கை இருக்கும் என்றாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT