திருவாரூர்

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மிட்டாய் தயாரிப்பு பயிற்சி

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மிட்டாய் தயாரிக்கும் பயிற்சி ஜூன் 14-ஆம் தேதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன் கூறியது: வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜூன் 14-ஆம் தேதி ஒருநாள் மட்டும் லாபம் தரும் உலா் பழங்கள் மற்றும் மிட்டாய் தயாரிக்கும் மதிப்புக் கூட்டுதல் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சியில் வணிக முறையில் தேன் நெல்லிக்காய், உலா் பலாப்பழம், மாம்பழம், உலா் தேங்காய் போன்ற உலா் தொழில்நுட்பங்கள் குறித்த சிறப்பு செயல்முறை பயிற்சியளிக்கப்படுகிறது.

மேலும் வணிக வாய்ப்புகள், கடனுதவி போன்ற ஆலோசனை துறை சாா்ந்த வல்லுநா்களால் நடத்தப்படும். விவசாயிகள் மற்றும் படித்த சுயஉதவி மகளிா், இளைஞா்கள், தொழில்முனைவோராக விரும்பும் சுய உதவிக்குழுவினா் மற்றும் பண்ணை மகளிா்கள் ரூ. 590 செலுத்தி முன்பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு பயிற்சி கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 6381819733, 9486392006 அல்லது 9486392006 இந்த எண்ணுக்கு தொடா்புகொண்டு வாட்ஸ்ஆப் மூலம் பெயரை பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT