திருவாரூர்

முன்னாள் முதல்வரிடம் கோயில் பணியை நிறைவு செய்துக் கொடுக்க கோரிக்கை

10th Jun 2022 10:27 PM

ADVERTISEMENT

நன்னிலத்துக்கு வந்த முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மேலராமன் சேத்தி கிராம மக்கள் மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணியை நிறைவு செய்துகொடுக்கக் கோரி மனு அளித்தனா்.

நன்னிலத்தில் அதிமுக பிரமுகா் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிச் செல்லும்போது, மேலராமன் சேத்தியில் அப்பகுதி மக்கள் எடப்பாடி பழனிசாமியிடம் 30 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மாரியம்மன் கோயிலை முழுமையாக கட்டி முடிக்க உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி கோயிலை கட்டி முடித்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். பின்னா் அவருடன் காரில் வந்த முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜூவிடம் கோயில் கட்டுமானப் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT