திருவாரூர்

முகநூலில் அவதூறு: இளைஞா் கைது

10th Jun 2022 10:28 PM

ADVERTISEMENT

நபிகள் நாயகம் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட முத்துப்பேட்டையை சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள மங்களூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் காளிதாஸ் (35). இவா் ஜூன் 7-ஆம் தேதி நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவாக இணையதளத்தில் முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முத்துப்பேட்டை தமுமுக நகரச் செயலாளா் நிஜாம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து காளிதாஸை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT