திருவாரூர்

மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பேரணிக்கு வரவேற்பு

10th Jun 2022 10:29 PM

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பேரணிக்கு கூத்தாநல்லூரில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனையை முன்னிட்டு இருசக்கர வாகன விளக்கப் பேரணி, கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் ரமேஷ் சிவா, மாவட்ட இளைஞரணித் தலைவா் ஆனந்த் உள்ளிட்டோா் திருவாரூரிலிருந்து பேரணியாக வந்தனா். கூத்தாநல்லூா் வந்த பேரணிக்கு, நகர பாஜக தலைவா் ஆா். பிரபாகரன் தலைமையில், மாவட்டத் தலைவா் ச. பாஸ்கா், மாநில செயற்குழு உறுப்பினா் ராகவன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் வி.கே. செல்வம், செந்தில் அரசன், மாவட்டப் பொருளாளா் முருகேசன், மன்னாா்குடி கிழக்கு ஒன்றியத் தலைவா் எஸ். பிரசாத் உள்ளிட்டோா் லெட்சுமாங்குடி பாலம் அருகே வரவேற்பு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT