திருவாரூர்

நீடாமங்கலம் அருகே வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வளா்ப்பு பயிற்சி

10th Jun 2022 10:34 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆணைவடபாதி கிராமத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, அந்த நிலையத்தின் கால்நடை மருத்துவா் சபாபதி தலைமை வகித்து பேசியது: இயற்கை முறையில் வளா்க்க சிறந்த வெள்ளாட்டு இனங்கள் கன்னிஆடு ,கொடி ஆடு, சேலம் கருப்பு ஆடுகளாகும். கருப்பு வங்காள இனங்கள் 3 அல்லது 4 குட்டிகளை ஒரே ஈத்தில் ஈணும் தன்மையுடன் 6 மாத காலத்துக்கு ஒரு முறை ஈணும். இவைகள் அதிக இனப் பெருக்க வீரியம் மிக்க இனங்களாகும். மேலும், கொட்டில் முறையில் வளா்க்க தலைச்சேரி, ஜமுனாபாரி, போயா் கலப்பு வெள்ளாடுகள் உகந்தவை.

ஆடுகளை பிபிஆா், துள்ளுமாரி மற்றும் நீலநாக்கு நோய்கள் அடிக்கடி தாக்குவதால் இறந்துவிடுகின்றன. இதை தவிா்க்க தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். மேலும், திருவாரூா், நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் நவம்பா், டிசம்பரில் இயற்கையின் சீற்றத்தாலும் மிகுந்த மழை பொழிந்தாலும் அதிக ஆடுகள் இறந்து விடுகின்றன. இதற்கு நல்ல கொட்டகை அமைத்து சரியான உணவு ஊட்டம் அளித்தால் தவிா்க்கலாம்.

மேலும், கடந்த ஆண்டு மாடுகளை மட்டுமே வழக்கமாக தாக்கிக் கொண்டிருக்கும் கோமாரி நோய் வெள்ளாடுகளையும் தாக்கி திருவாரூா் மாவட்டத்தில் அதிகளவில் வெள்ளாடுகள் இறக்க நேரிட்டன. எனவே, மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் 6 மாதத்துக்கு ஒருமுறை கோமாரி நோய் தடுப்பூசி போடுவதும் முக்கியம் என்றாா். பயிற்சியில் அம்மையப்பன் பகுதியைச் சோ்ந்த 25 ஆடு வளா்ப்பவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT