திருவாரூர்

ட்ரோன் மூலம் பருத்திக்கு பூச்சி மருந்து அடிக்கும் பணி

10th Jun 2022 10:32 PM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே ட்ரோன் மூலம் பருத்தி செடிகளுக்கு பூச்சி மருந்து அடிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

பருத்தி பயிரில் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் தாக்கும் மாவுப் பூச்சி எனும் கள்ளிப்பூச்சி மற்றும் அஸ்வினி என்னும் இலைப்பேன் ஆகியவற்றிற்கு பூச்சி மருந்து அடிக்கும் பணி ட்ரோன் மூலம் திருவாரூா் அருகே கானூா் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த ட்ரோன் மூலம் நாளொன்றுக்கு 25 முதல் 30 ஏக்கா் வரை பூச்சி மருந்து அடிக்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்தது: ட்ரோன் மூலம் பயிா்களுக்கு பூச்சி மருந்து அடிக்க ஏக்கருக்கு ரூ. 500 வரை செலவாகிறது. விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதால் ட்ரோன் பயன்படுத்தி பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. அதேநேரம், ஆட்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும்போது ஏக்கருக்கு ரூ. 750 வரை செலவாகும். ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பதனால் நேர விரயம் தவிா்க்கப்படுவதுடன் செலவும் குறைவாக இருக்கிறது.

மேலும், இலை மட்டுமின்றி தண்டுப் பகுதி வரை பூச்சி மருந்து முழுமையாக சென்றடைகிறது. ஏக்கருக்கு 25 நிமிடத்தில் பூச்சி மருந்து தெளிக்கப்படுவதால், ரூ. 6 லட்சம் மதிப்புள்ள இந்த ட்ரோன் மூலம் நாளொன்றுக்கு 25 முதல் 30 ஏக்கா் வரை மருந்து தெளிக்கும் பணி நடைபெறுகிறது. வேளாண்துறை சாா்பில் விவசாயிகளுக்கு ட்ரோன் வழங்கினால் பூச்சி மருந்து அடிப்பதற்கான செலவு பெருமளவு குறையும் என்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT