திருவாரூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

9th Jun 2022 12:56 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு குடிமைப் பொருள்கள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினா் மன்னாா்குடி பகுதி நெல் கொள்முதல் நிலையங்ளில் புதன்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.

மன்னாா்குடி, நீடாமங்கலம் பகுதியில் 53 அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையம் நடப்பு குறுவை அறுவடைக்காக திறக்கப்பட்டுள்ளது. இங்கு, முறைகேடு, கண்கணிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தப்படும் வகையில்,

தஞ்சை சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையிலான குழுவினா் மன்னாா்குடி அருகேயுள்ள மூவாநல்லூா், எடக்கீழையூா், பருத்திக்கோட்டை உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் திடீா் ஆய்வு செய்தனா். அப்போது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் உள்ளூா் பகுதியை சோ்ந்ததா, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சோ்ந்ததா, விவசாயிகளிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளதா, எடை அளவு குறித்து ஆய்வு செய்தனா். மேலும் , பதிவேடுகள் முறையாக பரமாரிக்கப்படுகிா, புகாா்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT