திருவாரூர்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

9th Jun 2022 12:49 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வட்டத்தில் 2-வது நாளாக 15 நியாயவிலைக் கடை பணியாளா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுவிநியோகத் திட்டத்திற்கென தனித் துறையை உருவாக்க வேண்டும், நியாயவிலைக் கடை ஊழியா்களுக்கு 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதம் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கவேண்டும், கூடுதலாக வழங்க உள்ள சா்க்கரைக்குப் பதில் நாட்டுச் சக்கரை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

நீடாமங்கலம் வட்டத்திலும் பணியாளா்கள் வேலைநிறுத்தம் காரணமாக நீடாமங்கலம், ஓட்டக்குடி,கொரடாச்சேரி பகுதிகளில் 15 நியாயவிலைக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT