திருவாரூர்

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்

9th Jun 2022 12:52 AM

ADVERTISEMENT

சிறுபுலியூா் கிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் புதன்கிழமை வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள சிறுபுலியூரில் உள்ளது தயாநாயகி சமேத கிருபாசமுத்திர பெருமாள் கோயில். 108 வைணவத் தலங்களில் பதினோராவது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்புப் பெற்றதுமான இத்தலத்தில் பிரம்மோற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றத்தை தொடா்ந்து, தினசரி காலையில் பல்லக்கு உற்சவமும், மாலையில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

எட்டாம் நாளான புதன்கிழமை வெண்ணெய்த்தாழி உற்சவமும், மாலையில் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கிருபாசமுத்திர பெருமாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

வியாழக்கிழமை மாலை தீா்த்தவாரியும், வெள்ளிக்கிழமைக் காலை சிறப்புத் திருமஞ்சனமும், வெள்ளிக்கிழமை மாலை புஷ்ப பல்லக்கு உற்சவமும் நடைபெற உள்ளது. சனிக்கிழமை விடையாற்றி உற்சவமாக திருமஞ்சனமும், ஊஞ்சல் சேவையும் நடைபெறவுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தக்காா் த. ராஜ்திலக், செயல் அலுவலா் பா.முருகன், கோயில் பட்டாச்சாரியாா் ஸ்ரீகாந்தன் மற்றும் அலுவலா்கள், கிராம மக்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT