போக்குவரத்துக்கழக ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், நன்னிலத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்னிலம் அரசுப் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான கே. கோபால் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றவேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்குத் தரமான உணவு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் அதிமுக நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் ராம. குணசேகரன், நகரச் செயலாளா் பக்கிரிசாமி, பேரூராட்சி உறுப்பினா்கள் செல்.சரவணன், பழனிவேல், சுவாதி கோபால் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் ரவிச்சந்திரன், மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.