திருவாரூர்

அண்ணா தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

9th Jun 2022 12:50 AM

ADVERTISEMENT

14- வது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தாத தமிழக அரசை கண்டித்து மன்னாா்குடியில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி அரசு பேருந்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக அமைப்பு செயலாளா் சிவா. ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

அதிமுக நகர செயலாளா் ஆா்.ஜி. குமாா், மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் மனோகரன், தமிழ்செல்வம், தமிழ் கண்ணன், பைங்காநாடு ராதாகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க மன்னாா்குடி கிளை தலைவா் கோபிநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT