திருவாரூர்

கூத்தாநல்லூர்: டெல்டா பப்ளிக் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

7th Jun 2022 03:58 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர்: திருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளியில், சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து டெல்டா பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று புறப்பட்ட விழிப்புணர்வு பேரணிக்கு, மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி தாளாளர் திமுஜீத்தீன் தலைமை வகித்தார். மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பள்ளி தாளாளரும், அரிமா சங்கத் தலைவருமான ப.முருகையன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு பேரணியை, காவல்துறை ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் கொடியசைத்து, தொடக்கி வைத்தார். 

பேரணி, மன்னார்குடி - திருவாரூர் பிரதான சாலை, காவல் நிலையம், புதிய பேருந்து நிலையம், புதிய நகராட்சி, பூதமங்கலம் சாலை வழியாக, பனங்காட்டாங்குடியில் அமைந்துள்ள டெல்டா பப்ளிக் பள்ளியை அடைந்தது. பள்ளியின் வாசலில், தாளாளர் ஹாஜா பகுருதீன் வரவேற்றார். தொடர்ந்து, பள்ளி வளாகத்திற்குள், நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா, தாளாளர் ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் 25-க்கும் மேற்பட்ட  நிழல் தரும் மரங்களை நட்டு, தண்ணீர் ஊற்றினர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை, துணை முதல்வர் ஆர்.சுருளி நாதன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவனித்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: இந்தியன் 2 படப்பிடிப்பு: உதயநிதி ஸ்டாலின் புதிய தகவல்

ADVERTISEMENT
ADVERTISEMENT