வலங்கைமான் தையல் நாயகி சமேத ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலில் சனிக்கிழமை கோபூஜை நடைபெற்றது.
வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டத்தை முன்னிட்டு கோயிலில் கோபூஜை ஹோமம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், அதிமுக ஒன்றிய செயலாளா் சங்கா், நகரச் செயலாளா் குணசேகரன், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயபால், மீனா ராம் டிரஸ்ட் உரிமையாளா் சிவராமகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி இணை செயலாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.