திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டம்

7th Jun 2022 01:10 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 235 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கண்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT