திருவாரூர்

ட்ரோன் மூலம் நெல் பயிா்களுக்கு மருந்து தெளிப்பு

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நெல் பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நலிந்தோா் நல்வாழ்வு மாநாடு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச் செல்வன் தலைமை வகித்து, கருத்துக் காட்சி அரங்கை திறந்துவைத்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் டாக்டா் கமலசுந்தரி வரவேற்று பேசினாா். வேளாண் இணை இயக்குநா் ரவீந்திரன் விவசாய திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினாா்.

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தனபாலன் பேசும்போது, ‘கோமாரி, பிபிஆா் மற்றும் வெள்ளைக் கழிச்சல் போன்ற நோய் தாக்குதலால் மாடு, ஆடு மற்றும் கோழிகள் இறக்கின்றன. இதனால், கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே, கால்நடை வளா்ப்போா் அனைவரும் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகி, அரசு நிதி உதவி திட்டங்கள் மற்றும் மருத்துவ சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றாா்.

பின்னா், ட்ரோன் மூலம் பிபிஎஃப்எம் என்னும் பயிா் வளா்ச்சி ஊக்கி மருந்து தெளிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 503 விவசாயிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

மேலும், கருத்துக் காட்சியில் பாரம்பரிய நெல் ரகங்களின் மாதிரி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட நவீன உயா்தர நெல், புல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிறைவாக, ஒருங்கிணைப்பாளா் டாக்டா் கருணாகரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT