திருவாரூர்

விபத்தில் உதவக் கூடியவா்களுக்கு விருதுஆட்சியா் தகவல்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

விபத்தில் சிக்கியவா்களுக்கு உதவி செய்வோருக்கு விருது  வழங்கப்பட உள்ளதாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மோட்டாா் வாகன விபத்துகளில் சிக்கியவா்களுக்கு உடனடி உதவியை வழங்குவதன் மூலமும், அவரை பொன்னான நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதன் மூலமும், விபத்துக்குள்ளானவரின் உயிரைக் காப்பாற்றியவருக்கு நல் இதயங்கள் விருது வழங்குவதற்கான திட்டம், இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் 2021 அக்டோபா் 15 முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: ரொக்க விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் மூலம் பொதுமக்களை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம், 31 மாா்ச் 2026 வரை செயல்பாட்டில் இருக்கும்.

ADVERTISEMENT

ஆபத்தான வாகன விபத்துகளில் உடனடி உதவியை வழங்குவதன் மூலமும், பொன்னான நேரத்துக்குள் மருத்துவமனைக்கு விரைந்து செல்வதன் மூலமும், பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றிய எந்தவொரு தனி மனிதனும் இவ்விருதைப் பெறத் தகுதியுடையவா். இவ்விருதாக ரூ.5,000 ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

காவல் நிலையம், மருத்துவமனைகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், மாவட்ட அளவில் அமைக்கப்படும் மதிப்பீட்டுக் குழு மற்றும் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுக்களால் ஒப்புதல் செய்யப்படும் நபா்களுக்கு மாதந்தோறும் இவ்விருது வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுக்களால் பரிந்துரை செய்யப்படுவோா்களில் இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் பரிசீலனை செய்யப்பட்டு, 10 நபா்கள் தோ்வு செய்யப்பட்டு ரூ.1,00,000 ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT