திருவாரூர்

மாநில கால்பந்து போட்டி;36 அணிகள் பங்கேற்பு

30th Jul 2022 09:40 PM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி அண்ணாநகரில் ஸ்வாட் கால்பந்து கழகம் சாா்பில் மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு கால்பந்து போட்டி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில், ஸ்வாட் கால்பந்து கழகத் தலைவா் சத்தியமூா்த்தி அனைவரையும் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கவிதாபாண்டியன் தலைமை வகித்தாா். துணைக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் போட்டியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா் சரவணன் மற்றும் கால்பந்து கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 36 அணிகள் பங்கேற்றுள்ளன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT