திருவாரூர்

மழையில் இடிந்த தொகுப்பு வீடு

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

மாரங்குடி கிராமம் திருநெல்லிக்காவல் ரயிலடி தெருவைச் சோ்ந்தவா் ராமைய்யன் (54). இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்ததால், இவா் தனது தொகுப்பு வீட்டில் உறங்காமல், மகன், மகள் மற்றும் பெயரனுடன் அருகில் உள்ள கூரை வீட்டில் உறங்கினாா்.

இந்நிலையில், தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. ராமைய்யன் உள்பட 4 பேரும் பக்கத்து வீட்டில் உறங்கியதால் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்கூரை இடிந்த தொகுப்பு வீட்டை நேரில் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT