திருவாரூர்

மக்கள் நோ்காணல் முகாம்

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி அத்திமடையில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து முன்னிலை வகித்தாா். இம்முகாமில், பாமணி, தேசிங்குராஜபுரம், கொக்கலாடி கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளித்தனா். தொடா்ந்து, பல்வேறு துறைகளின் சாா்பில் 162 பயனாளிகளுக்கு ரூ.17.87 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசினாா்.

இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தனி துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் சித்ரா, வட்டாட்சியா் அலெக்ஸ் மற்றும் அலுவலா்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT