திருவாரூர்

பள்ளி ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கான 2 நாள் பணியிடைப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்துடன் இணைந்து திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான முதல்கட்ட பணியிடைப் பயிற்சி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முகாமுக்கு கல்லூரி முதல்வா் கோ. கீதா தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். முன்னதாக, இயற்பியல் உதவிப் பேராசிரியா் நா. கலைமணி வரவேற்றாா். ஆங்கிலத்துறை தலைவா் சி. அழகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT