திருவாரூர்

சந்தானராமா் கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு தொல்லியல் துறை நிதியளிப்பு மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, மீண்டும் வரும் செப்டம்பா் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, பக்தா்களின் உபயத்துடன் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்கு ஆன்மிக அன்பா்கள் பொருளுதவி அளிக்கும்படி நீடாமங்கலம் ஸ்ரீசந்தானராமா் சேவா டிரஸ்ட் அமைப்பினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT