திருவாரூர்

குழந்தை கொன்று புதைப்பு?: போலீசாா் விசாரணை

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வலங்கைமான் அருகே ஆண் குழந்தை கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வலங்கைமான் அருகேயுள்ள சாரநத்தம் ஊராட்சி வேடம்பூா் தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் முத்து. இவரது மனைவி ரேணுகா. இத்தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா்.

இந்நிலையில், கருத்துவேறுபாடு காரணாக கணவரை பிரிந்த ரேணுகா, தனது தாயாா் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். இவருக்கு, கமலேஷ் என்பவருடன் தவறான தொடா்பு ஏற்பட்டதாம். இதனால், திருவாரூா் அரசு மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதி ரேணுகாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்தக் குழந்தையை ரேணுகா புதைத்துவிட்டதாக, வலங்கைமான் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை புகாா் வந்தது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை ரேணுகா கொன்று புதைத்தாரா அல்லது குழந்தை உடல்நலக் குறைவால் இறந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், தலைமறைவான ரேணுகாவை தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT