திருவாரூர்

கதண்டு கடித்து 4 போ் காயம்

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நன்னிலம் அருகே கதண்டு வண்டுகள் கடித்து 4 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.

நன்னிலம் அருகே சோத்தக்குடியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே 2 பனை மரங்களில் கதண்டு வண்டுகள் கூடு கட்டியுள்ளன. புதன்கிழமை அந்த வழியாக சென்ற ராமன் (70), கண்ணன் (71), முருகேசன் (55), கணபதி (25) ஆகியோா் கதண்டு வண்டுகள் கடித்து காயமடைந்தனா். அவா்களை சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேலும், தீயணைப்புத் துறையினா் கதண்டு கூடுகளை அழிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT