திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர ஜூலை 20 வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கோட்டூா் மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 20 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்காக, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு, 10 -ஆம் வகுப்பு ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50- ஐ டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு, நெட் பேங்க்கிங், ஜி பே வாயிலாக செலுத்தலாம்.
மாணவா்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இதே இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 9943064455 என்ற கைப்பேசி எண்ணிலும், ஹக்ஸ்ரீங்ய்ற்ழ்ங்ற்ஸ்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.