திருவாரூர்

தென்பரை இலவசப் பயிற்சி மையம் முப்பெரும் விழா

17th Jul 2022 10:52 PM

ADVERTISEMENT

 

மன்னாா்குடியை அடுத்த தென்பரை இலவசப் பயிற்சி மையத்தில் நூல் வெளியீட்டு விழா, போட்டித் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வழங்குதல் மற்றும் தோ்வு எழுதுவோருக்கு வாழ்த்து தெரிவித்தல் என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்பரை இலவசப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவிற்கு, முதுகலை ஆசிரியா் க. மனோகரன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் கா. இளையராஜா, துணைத் தலைவா் மனோகரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் வீரா. பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்பரைத் தமிழன்பன் எழுதிய ‘சங்கம் மருவிய கால இலக்கியம்’ என்ற நூலை,திமுக கோட்டூா் தெற்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா். தேவதாஸ் வெளியிட, கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மோ. கலைவாணி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT

தென்பரை இலவசப் பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு 144 போ் பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்களுக்கு ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு, பேனா ஆகியவற்றை சிறப்பு அழைப்பாளா்கள் வழங்கினா்.

பயிற்சி மைய முதல்வா் சு. வைரமுத்து, ஆசிரிா்கள் அன்புச்செல்வி, அய்யப்பன், காா்த்திகேயன், ஜெயவீர பாண்டியன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

தோ்வு எழுதவுள்ள மாணவா்களை வாழ்த்தி, மிட்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி. குருசாமி, முன்னாள் உதவி செயற்பொறியாளா் கோ. உலகநாதன், தலைமையாசிரியா்கள் கு. மெய்யப்பன், அ. ஜோன்ஸ் ஐன்ஸ்டீன், பள்ளி வளா்ச்சிக்குழு உறுப்பினா் நாராயணசாமி, ஆசிரியா் பயிற்றுநா் சக்திவேல், விவசாய சங்க நிா்வாகி கணேசன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, பயிற்சி மைய நிறுவனா் நா. சுப்ரமணியன் வரவேற்றாா். நிறைவகா சமுதாயக் குழுமத்தின் செயலா் அய்யா.நடராஜன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT