திருவாரூர்

ஆலங்குடி குரு கோயிலில் ரூ.80 லட்சத்தில் திருப்பணிகள்

17th Jul 2022 10:55 PM

ADVERTISEMENT

 

நவகிரக தலங்களில் ஒன்றான நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ரூ. 80 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடியில் அமைந்துள்ளது ஆபத்சகாயேஸ்வரா் கோயில். இது நவகிரகங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படுகிறது.

இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலாலயம் நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடா்ந்து, திருப்பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. கோயிலின் ராஜகோபுரம், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன் உள்ளிட்ட சந்நிதிகள், விமானங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. சுமாா் ரூ. 80 லட்சம் மதிப்பில் நடைபெறும் இப்பணிகள் நிறைவு பெற்றதும், மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT