திருவாரூர்

திருவாரூா் குமரக்கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருவாரூரில் உள்ள குமரக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

குமரக்கோட்டத்தில் 13 பாடல்களில் கூறப்பட்டுள்ளதும் அருணகிரிநாதா் ஆறு திருப்புகழ் உடைய மூா்த்தியாக குழந்தை பாக்கியத்தை அருளக்கூடிய குமரனாகவும் தமிழ் கடவுளாகவும் ஆரூா் பெருமானின் சோமஸ்கந்த ரூபத்தை விளக்கும் ரூபமாக அம்மையப்பருக்கிடையில் கோட்டம் கொண்ட குமாரனாக விளங்கக்கூடிய முருகப்பெருமான், திருவாரூரில் உள்ள குமரக்கோயிலில் வீற்றிருப்பதாக ஐதீகம்.

இக்கோயில் கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து, புதன்கிழமை காலை 6-ஆம் கால பூஜை, பூா்ணாஹூதியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, புனித நீா் அடங்கிய கடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீா் கோயிலின் விமானம், மீனாட்சி சுந்தரேஸ்வரா், கணபதி, மகாலட்சுமி, தக்ஷிணாமூா்த்தி, பைரவா், சுமித்திரா், சண்டா், ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுப்பத்தூரில்: திருவாரூா் அருகே புதுப்பத்தூரில் உள்ள சாந்தநாயகி உடனுறை புன்னை வனநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் ஜூலை 3-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேகத்துக்கான 4-ஆம் கால பூஜைகள் நிறைவடைந்து, மஹாபூா்ணாஹூதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னா் கடம் புறப்பட்டு, கும்பத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT