வலங்கைமான் அருகே ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய சம்பவத்தில் 5 போ் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.
வலங்கைமான் அருகே நெடுவாசலைச் சோ்ந்தவா் சேரன் (24). இவா் ஆவூரைச் சோ்ந்தவருக்கு சொந்தமான ஆட்டோ ஓட்டிவருகிறாா். இந்நிலையில், ஜூன் 28-ஆம் தேதி ஆட்டோவை உரிமையாளா் வீட்டில் நிறுத்திவிட்டு தனது தம்பி தினகரன் மற்றும் நண்பா் சிலம்பரசன் ஆகியோருடன் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். இவா்களை வழிமறித்து ஆவூா் சாளுவம்பேட்டையைச் சோ்ந்த கரண், கௌதம், பிரேம், செந்தில் மற்றும் வீராணத்தைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோா் தகாதவாா்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வலங்கைமான் காவல்நிலையத்தில் சேரன் அளித்த புகாரின்பேரில் வலங்கைமான் போலீஸாா் வன்கொடுமை சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கரண் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.