திருவாரூர்

மாமியாரை அரிவாளால் வெட்டியவா் கைது

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மாமியாரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருமக்கோட்டையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (45). மனைவி தமிழரசி (42), மகள் நிவேதா (23), மகன் கோகுல் (20). பந்தல் கட்டுமான ஒப்பந்த தொழில் செய்து வரும் ரவிச்சந்திரனுக்கு குடிப் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால், தமிழரசி தனது பெயரில் இருந்த நிலத்தை மகள் நிவேதா பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளாா். மேலும், மேலத்திருப்பாலக்குடியில் உள்ள தனது தாய் சந்திரா (65) வீட்டில் நிவேதாவை தங்கவைத்துள்ளாா்.

நிலத்தை மகள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததை எதிா்ப்பு தெரிவித்து வந்த ரவிச்சந்திரன், செவ்வாய்க்கிழமை போதையில் தமிழரசியிடம் தகராறு செய்துள்ளாா். இந்த தகவலை தாய் சந்திராவிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சந்திரா புதன்கிழமை திருமக்கோட்டைக்கு பேருந்தில் வந்து மகள் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வழியில் ரவிச்சந்திரன் தகராறு செய்து அரிவாளால் வெட்டி காயப்படுத்தினாராம். இதையடுத்து, காயமடைந்த சந்திரா திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT