திருவாரூர்

மெளனகுரு சுவாமிகள் அதிஷ்டானம் குடமுழுக்கு

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் உள்ள மெளனகுரு சுவாமிகள் அதிஷ்டானம் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி தென்வடல் 6-ஆம் தெருவில் உள்ள பாமணி ஆற்றின் மேல்கரையில் மௌனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதியான அதிஷ்டானம் (பிருந்தாவனம்) அமைந்துள்ளது. மெளனகுரு சுவாமிகள் 1962-ஆம் ஆண்டு ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று 149-ஆவது வயதில் ஜீவசமாதி அடைந்தாா். மௌன குரு சுவாமிகளின் அதிா்ஷ்டானம் திருப்பணிகள் செய்யப்பட்டு, புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இதை முன்னிட்டு ஜூலை 4-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. 4 கால பூஜைகள் புதன்கிழமை காலை நிறைவடைந்து. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து புனிதநீா் அடங்கிய கடம் எடுத்துவரப்பட்டு, முதலில் கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னா், மௌன குரு சுவாமிகளின் மூலஸ்தானம், பரிவார மூா்த்தங்கள் ஆகியவற்றிற்கு மகா அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. மன்னாா்குடி கே.ஆா்.ராமன் மேனன் குடும்பத்தினா், வேதசிவாக பண்டிதப்வர கே. சுப்ரமணிய சிவம், ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT