திருவாரூர்

மன்னாா்குடி ஹரித்ராநதி தெப்ப உற்சவம்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆனி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாள்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வான 9-ஆம் நாள் தெப்ப உற்சவம் கோயிலின் வடக்கு பகுதியில் 23 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள சேதுபாவாசத்திரம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நடைபெறும்.

நிகழாண்டுக்கான தெப்ப உற்சவ கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்றது. இதையடுத்து, தெப்ப உற்சவம் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்பம் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக, தெப்பக்குளத்தில் நீலம், அகலம் தலா 50 அடியில் 700 எண்ணிக்கையில் சவுக்கு மற்றும் மூங்கில் கம்புகள், 458 காலி தகர பேரல்கள் கொண்ட தெப்ப அடித்தளம் அமைக்கப்படுகிறது. இதில் 43 அடி உயரம் 27 அடி சுற்றளவு கொண்ட மொத்தம் 11 டன் எடையுள்ள தெப்பம் அமைக்கப்படவுள்ளது. தெப்பம் கட்டுமானப் பணி தங்க. குமரேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT