திருவாரூர்

கூத்தாநல்லூரில் அரசு மகளிா் கல்லூரி: முதல்வா் காணொலி மூலம் இன்று திறந்துவைக்கிறாா்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூரில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சென்னையில் இருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை ( ஜூலை 7) காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறாா்.

கூத்தாநல்லூா் ஜாமியாத் தொடக்கப் பள்ளியில் தற்காலிகமாக புதிய அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்படவுள்ளது. முதல்வரின் காணொலி மூலம் திறந்துவைக்கும்போது கூத்தாநல்லூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாலு, மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம், நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT