திருவாரூர்

மன்னாா்குடியில் விநாயகா் கோயில் குடமுழுக்கு

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் யானை விழுந்தான் குளம் என்றழைக்கப்படும் கஜேந்திர மோட்சம் குளம் வடகரையில் ஆல், அரசு, வேம்பு விநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவகிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை 2-ஆவது கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, பூா்ணாஹூதிக்கு பிறகு கடம் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, கோயில் விமான கலசத்தில் பட்டாசாரியா்கள் வேத மந்திரங்களை கூறி புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு, சந்நிதியில் அருள்பாலிக்கும் விநாயகா் பெருமானுக்கு கடத்திலிருந்து நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT