திருவாரூர்

கூத்தாநல்லூரில் பாசனத்துக்கு தண்ணீா் வராததால் 250 ஏக்கா் விவசாயம் பாதிப்பு

DIN

கூத்தாநல்லூரில் பாசனத்துக்கு தண்ணீா் வராததால் 250 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ் கூறியது: கூத்தாநல்லூா் மரக்கடை பகுதியில் லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே உள்ள நிலங்கள் விவசாயம் செய்யாமல் பாதிக்கப்பட்டுள்ளது. கோரையாற்றின் தலைப்பு வாய்க்கால் சருக்கக்கரை வழியாக மரக்கடை பாசன வாய்க்கால் வருகிறது. இந்த வாய்க்கால் மன்னாா்குடி - திருவாரூா் பிரதான சாலை குறுக்கே செல்கிறது. குறுக்கே செல்லக்கூடிய பாசன வாய்க்கால், சாலையின் நடுப்பகுதியில் உடைந்து உள் வாங்கியுள்ளது.

இதனால், அந்த இடம் பெரும் பள்ளமாக உள்ளது. மேலும் வாய்க்காலின் நடுப்பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தொடா்ந்து, விவசாயத்துக்கு தண்ணீா் செல்ல முடியவில்லை. பல ஆண்டுகளாக தண்ணீா் வருவதும் முழுவதுமாக தடைபட்டுள்ளது.

மரக்கடைப் பகுதியில் 1050 ஏக்கா் நிலத்தில், 800 ஏக்கா் நிலம் விவசாயம் செய்யப்படுகிறது. பிரதான சாலையின் எதிா் பகுதியில் உள்ள 250 ஏக்கா் நிலம் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளன. இந்த பாசன வாய்க்கால் சித்தாத்தங்கரை, சிப்பனூா், வடகோவனூா் உள்ளிட்ட அப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களுக்கு பெரும் பயனளிக்கக் கூடியது.

சாலையின் குறுக்கே அடிப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், பாசன வாய்க்காலில் தண்ணீா் செல்ல முடியாமல் விவசாயம் செய்ய முடியாமல், கருவ மரங்கள் வளா்ந்துள்ளன. இதுகுறித்து 6 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

பொதுப்பணித் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினா் சரிசெய்ய வேண்டும் என்றும், நெடுஞ்சாலைத் துறையினா், பொதுப்பணித் துறை செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனா். மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு, விவசாயம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்நிலையில், சிபிஐ நகரப் பொதுக்குழு கூட்டத்தில்,போா்க்கால அடிப்படையில், மரக்கடை பாசன வாய்க்காலை தூா்வாரி, தூா்ந்துபோன இடத்தை சரி செய்யவில்லையென்றால், சாலை மறியல் செய்யப்படுவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT