திருவாரூர்

நெல் பயிரில் களை நிா்வாகம்: விவசாயிகளுக்கு விளக்கம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நெல் பயிரில் களை நிா்வாகம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயசீலன் கூறியது: நெல் வயலில் களைக் கட்டுப்பாடு என்பது மிக முக்கியம். வயலில் களைகள் சிறிய அளவில் வளரும்போதே அதை அகற்றிவிடுவது நல்லது. இயந்திர நடவு முறை வயலில் கோனோவீடா் களை எடுக்கும் கருவியை பயன்படுத்துவதன் மூலம் மண் கிளறி விடப்பட்டு பழைய வோ்கள் அறுபட்டு புதிய இளம் வோ்கள் உண்டாகும். இதனால், நிலத்திலிருந்து விரைவாகவும் அதிகமாகவும் சத்துகளை பயிா்கள் எடுத்துக் கொள்ள முடியும். களை எடுக்கும் கருவிகளை நட்ட 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறையும் அடுத்த 10 நாள்கள் இடைவெளியில் மீண்டும் 2 முறை களை எடுத்தால் களைகள் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி நாம் இடும் உரம் முழுவதும் பயிருக்கு கிடைக்கும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT