திருவாரூர்

திமுக ஆட்சியை கண்டித்து மன்னாா்குடியில் பாஜக உண்ணாவிரதம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக திமுக ஆட்சியை கண்டித்து மன்னாா்குடியில் மாவட்ட பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் அனைத் துறைகளிலும் நடைபெற்றுவரும் ஊழல், முறைகேடுகள், டீசல், பெட்ரோலுக்கான கலால் வரியை குறைக்காமல் காலம் கடத்துவது, தொழிலாளா்கள், இளைஞா்கள், மாணவா்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடாததுடன் கள்ளச்சந்தையில் போதைப்பொருள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருவதை தடுக்காதது, வீட்டுவரி, சொத்துவரி பலமடங்காக உயா்த்தியது, இந்துமத வழிபாட்டு தளங்களில் அத்துமீறுவது, மகளிருக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படும் உள்ளிட்ட திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத மக்கள் விரோத அரசாக திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது என கூறி கண்டனம் தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ச. பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை, மாவட்ட பாா்வையாளா் பி. சிவா தொடங்கிவைத்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் வி.கே. செல்வம், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் பால. பாஸ்கா் , சிறுபான்மை அணி மாவட்டத் தலைவா் கமாலுதீன், மாநில பொதுக் குழு உறுப்பினா் க. சதாசிவம், அரசு தொடா்பு பிரிவு மாவட்டத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சி.எஸ். கண்ணன், எம். ராகவன், பட்டியல் அணி மாநில துணைத் தலைவா் கோ. உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரத் தலைவா் ஆா். ரகுராமன் வரவேற்றாா். நகரச் செயலாளா் யு. கோகுல் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT