திருவாரூர்

பிரதமா் குடியிருப்புத் திட்ட விவர கையேடு பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் வீடுகட்டி வரும் பயனாளிகளுக்கு திட்ட விவர கையேட்டை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து அவா் கூறியது: மாவட்டத்தில் பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 2021-2022-ஆம் ஆண்டுக்கு 16,138 பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, பயனாளிகளால் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பயனாளிகளுக்கு வீட்டுக்கான மதிப்பீட்டுத் தொகை, வீட்டின் கட்டுமான நிலைவாரியாக விடுவிக்கப்படும் தொகை, துறை மூலம் வழங்கப்படும் கட்டுமானப் பொருள்கள், 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் விடுவிக்கப்படும் தொகை ஆகிய விவரங்கள் அடங்கிய திட்ட விவர கையேடுகள் முதல் கட்டமாக 14,727 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியின்போது, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT