திருவாரூர்

அமைப்புச்சாரா தொழிலாளா்கள் பதிவு செய்ய நாளை முகாம்

5th Jul 2022 01:00 AM

ADVERTISEMENT

திருவாரூரில், அமைப்புச்சாரா தொழிலாளா் விவரங்களை பதிவு செய்யும் முகாம் புதன்கிழமை (ஜூலை 6) நடைபெறவுள்ளது என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ம. ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்ட அளவிலான அமைப்புச்சாரா தொழிலாளா் விவரங்களை பதிவு செய்யும் முகாம், இலவங்காா்குடி ஊராட்சிக்குள்பட்ட பவித்திரமாணிக்கம் நூலகத்தில் நடைபெறுகிறது.

ங்ள்ட்ழ்ஹம்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளம் மூலம், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், வீட்டுப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், குத்தகைதாரா்கள், பேக்கிங் செய்வோா், தச்சு வேலை செய்வோா், கல் குவாரி தொழிலாளா்கள், மர ஆலை தொழிலாளா்கள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டப் பணியாளா்கள் ஆகியோரின் அனைத்து விவரங்களையும் அரசு பொது இ-சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யும் பணி நடக்கிறது. மத்திய அரசின் அமைப்புச்சாரா தொழிலாளா் தேசிய தரவு தளத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளிட்ட 156 வகையான தொழிலாளா்கள் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT